மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2024ம் ஆண்டில் ஏப்ரல் வரையில் வெளிவந்த படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவில்லை. அந்தக் குறையை மே 3ம் தேதி வெளிவந்த 'அரண்மனை 4' படம் மாற்றியது. அந்தப் படம் 50 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. அதற்கடுத்து கடந்த வாரம் வெளிவந்த படங்களில் கவின் நடித்த 'ஸ்டார்' படத்திற்கு கடந்த மூன்று நாட்களுமே குறிப்பிடும்படியான ரசிகர்கள் வந்துள்ளனர். சுமார் 10 கோடி வரையில் இப்படத்திற்கு வசூல் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.
இந்த வாரம் மே 17ம் தேதி சந்தானம் நடித்துள்ள 'இங்கு நான்தான் கிங்கு', விஜயகுமார் நடித்துள்ள 'எலக்சன்' உள்ளிட்ட படங்கள் வருகின்றன. சந்தானம் படம் நகைச்சுவைப் படமாகவும், விஜயகுமார் படம் அரசியல் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக 'அரண்மனை 4, ஸ்டார்' படங்கள் மூலம் மக்கள் தியேட்டர்களை நோக்கி வந்துள்ளனர். அதே போல இந்த வாரமும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கை தியேட்டர்காரர்களுக்கு உள்ளது.
ஐபிஎல் போட்டிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் யார் யார் பிளே ஆப் போகப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். தேர்தலும், தேர்வுகளும் முடிந்துவிட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகளும் முடிந்து விட்டால் தியேட்டர்கள் பழையபடி களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் திரையுலகினர் இருக்கிறார்கள்.