'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
விஜய்சேதுபதி நடித்த சேதுபதி, சித்தார்த் நடித்த சித்தா போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது ‛வீர தீர சூரன்' என்ற விக்ரமின் 62வது படத்தை இயக்கி வருகிறார். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சித்திக் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் கிராமத்தில் மளிகை கடை நடத்தும் காளி என்ற கேரக்டரில் நடிக்கிறார் விக்ரம். இந்த கேரக்டர் ஒரு கட்டத்தில் கேங்ஸ்டராக உருவெடுப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், டிவிஎஸ் பைக்கில் மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார் விக்ரம். அந்த பைக்கின் முன் பகுதியில் அவரது மனைவியாக நடிக்கும் துஷாரா விஜயன் அமர்ந்திருக்கிறார். இருவரும் சிரித்து பேசியபடி பைக்கில் சென்று கொண்டிருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் விக்ரம் ‛சம்பவம் லோடிங்' எனப் பதிவிட்டுள்ளார்.