டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

சமீபகாலமாக சோசியல் மீடியாவின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் பல நடிகைகளும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் பல எதிர்மறை எண்ணம் கொண்ட நெட்டிசன்கள் இவர்களது பதிவை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பதிலுக்கு இவர்களுடன் எந்த ஒரு நடிகையும் சரிக்கு சரி பதில் கொடுத்து மோதலில் ஈடுபடுவது இல்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர் இது போன்ற டிரோல்களை நிறைய சந்தித்தார். ஆனால் அதை எதிர்கொள்வதற்காக, பதிலடி தருவதற்காக இவர் புத்திசாலித்தனமாக சில மாற்று வழிகளை கையாண்டதாக சமீபத்தில் கூறியுள்ளார்.
அதாவது யாருக்கும் தெரியாமல் சில போலி கணக்குகளை சோசியல் மீடியாவில் உருவாக்கி அதன்மூலம் தன்னுடைய பதிவுகளில் முறையற்ற வகையில் விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு பெயரில் பதிலடி கொடுக்க துவங்கினாராம். ஆனால் இப்படி நான் செய்வது இதுவரை யாருக்குமே தெரியாது. ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டே போகட்டும் என அப்படியே விட்டுவிட முடியாது. அவர்கள் எல்லை மீறும்போது ஒரு கட்டத்தில் நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அமைரா தஸ்தூர்.




