நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு, கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த போது, சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார் மணிரத்னம்.
சமீபத்தில் கமல்ஹாசனும் டில்லி சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். தற்போது டில்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கத் மோட்சம் ஹனுமான் கோவிலில் கடந்த சில தினங்களாக தக்லைப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல் உடன் சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.
இதனிடையே நாளை இந்த படத்தில் இருந்து சிம்பு பற்றிய அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.