அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. வழக்கமான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை என்றாலும் அந்த படத்தின் கிளைமாக்சும், அதன் காரணமும் மக்களை கவர்ந்தது. படம் தற்போதும் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் பி.மணிவர்மனின் அடுத்த படம் தொடங்கி விட்டது.
இந்த படத்தை அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி.ரத்திஷ் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என தலைப்பிடப்பட்டு உள்ளது. தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யவுள்ளார்.
ஒரு நொடி படத்தில் நடித்த தமன் குமார் இதிலும் நடிக்கிறார். மால்வி மல்கோத்ரா ஹீரோயின். இவர்கள் தவிர மைத்ரேயா, ரக்ஷா செரின் அருன் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். கே.ஜி. ரத்திஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.