பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் |
தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராயன் படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற மே 9ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஜூன் மாதத்தில் இத்திரைப்படம் வெளியாகிறது என குறிப்பிட்டுள்ளனர். இப்பாடலில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். பிரபு தேவா இந்த பாடலுக்கு நடனத்தை இயக்கியுள்ளார் என தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.