பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லால் சலாம் திரைப்படம் வெளியானது. எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இந்த படம் வெற்றியை பெற தவறியது. இதையடுத்து ஐஸ்வர்யா படம் இயக்கப் போகிறாரா அல்லது சிறிது இடைவெளி விடப் போகிறாரா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது டாக்குமென்டரி படம் ஒன்றை இயக்கி வருகிறார். கேரளாவை சேர்ந்த திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி சில வருடங்களுக்கு முன்பு காலமான கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரான டாக்டர் சி.பி.மேத்யூ என்பவரைப் பற்றிய டாக்குமென்ட்ரி படத்தை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.
இதற்காக அவருடன் பணியாற்றிய பலரையும் நேரில் சந்தித்து அவர்களுடைய அனுபவங்கள் குறித்து வீடியோ பதிவை எடுத்து வருகிறார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சிக்குழி என்கிற பகுதியில் வசிக்கும் நெல்சம்மா என்பவர் டாக்டர் மேத்யூவுடன் பல வருடங்கள் இணைந்து பணியாற்றியவர். தற்போது ஓய்வு பெற்று வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து டாக்டர் மேத்யூ குறித்த விபரங்களை கேட்டறிந்து படமாக்கி உள்ளார் ஐஸ்வையா. இது குறித்து நர்ஸ் எல்சம்மாவின் மருமகள் ஷீலா என்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “எனது மாமியார் எல்சம்மாவை பார்க்க அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூட அவ்வப்போது வருவதுண்டு. அந்த வகையில் தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி டீன் சுரேஷ் என்பவர் எங்கள் வீட்டிற்கு வருவதாக முன்கூட்டியே கூறியிருந்தார். ஆனால் அவர் வந்த பிறகு தான் கூடவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வந்திருக்கிறார் என்கிற தகவலே எங்களுக்கு தெரிய வந்தது. முன்கூட்டியே தகவல் தெரிந்தால் தேவையில்லாத கூட்டம் கூடிவிடும் என்பதால் தான் இப்படி முன்னறிவிப்பின்றி வந்ததாக ஐஸ்வர்யா கூறினார். எங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் ரொம்பவே எளிமையாக பழகிய அவர் நாங்கள் பரிமாறிய உணவுகளை ருசித்து சாப்பிட்டார். இப்படி ஒரு விஐபி எங்கள் வீட்டிற்கு வந்ததாக சொன்னால் யாருமே நம்பவில்லை. அதன்பிறகு நான் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த பின்பு தான் அவர்களும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்” என்று கூறி உள்ளார்.