பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். அனுபமா நடிப்பில் தெலுங்கில் வெளியா ன கார்த்திகேயா 2, டில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் 'டில்லு ஸ்கொயர்' அடல்ட் கண்டன்ட் படம். இதில் அனுபமா படுக்கை மற்றும் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடித்து கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். முத்தக்காட்சிக்கென்று தனி சம்பளம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'பரதா ' என்ற படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். பிரவீன் கந்த்ரே குலா இந்தப் படத்தினை இயக்குகிறார். இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லாக்டவுன்' என்ற புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். என்.ஆர்.ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்கின்றனர். கே.ஏ.சக்திவேல ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊடரங்கு காலத்தில் நடப்பது மாதிரியான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக இது உருவாகிறது.