காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! |
'பிரேமம்' படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து மலையாளம், தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் “கொடி, தள்ளிப் போகாதே, சைரன்” ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இன்னும் ஒரு வெற்றிப் படத்தில் கூட தமிழில் நடிக்கவில்லை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் ஜோடியாக 'பைசன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்த மற்றொரு தமிழ்ப் படமான 'லாக்டவுன்' படத்தின் டீசர் இன்று காலையில் வெளியானது. இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்த நாளிலிருந்து இதுவரை இப்படம் பற்றி தன் சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிடாமல் இருக்கிறார் அனுபமா.
இத்தனைக்கும் இந்தப் படத்தில் அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தைப் பற்றிக் கூட அவர் எதுவும் பதிவிடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் படத்தின் பதிவுகளை அவர் எதற்காகப் புறக்கணிக்கிறார் என்பது தெரியவில்லை.