லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் இயக்குனர் லிங்குசாமி. இதனை அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் பையா, வேட்டை, கும்கி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' படத்தையும் தயாரித்தனர். இந்த படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
உத்தம வில்லன் தோல்விக்கு பொறுப்பேற்ற கமல்ஹாசன் அதற்கு பதிலாக புதிய படம் ஒன்றில் நடித்து தருவதாக லிங்குசாமிக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் அப்படி அவர் செய்யவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லிங்குசாமி இதனை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கமல்ஹாசன் மீது லிங்குசாமி புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், “கமல்ஹாசனை வைத்து எங்கள் பட நிறுவனம் தயாரித்த 'உத்தமவில்லன்' படம் தோல்வி அடைந்தது. எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட 30 கோடியில் இன்னொரு படத்தில் நடித்து தருவதாக கமல்ஹாசன் எழுத்து பூர்வமாக உறுதி அளித்து இருந்தார். ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை படம் நடித்து தரவில்லை.
எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி கமல்ஹாசன் உத்தரவாதம் அளித்தபடி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தருவதற்கு கால்ஷீட் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புகார் மனுவின் நகலை தயாரிப்பாளர் சங்கம் கமல்ஹாசனுக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.