லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் அஜித் குமார் கடந்த சில வருடங்களாக படங்களில் நரைத்த முடி, தாடி உடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் நடித்து வருகின்றார் . கடந்த 2015ல் அஜித் குமார் என்னை அறிந்தால் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு மட்டும் டை அடித்து இளமையான தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அஜித் இதுவரை எந்த படத்திலும் இளமை தோற்றத்தில் நடிக்கவில்லை.
தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்திலும் இதே லுக்கில் தான் நடிக்கிறார். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ' குட் பேட் அக்லி' என்கிற படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வருகின்ற மே 10ந் தேதி அன்று தொடங்குகிறது. முதலில் மற்ற நடிகர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகின்றன. பின்னர் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதனிடையே இந்த படத்திற்காக அஜித் இளமையான தோற்றத்திற்கு மாறி நடிக்கவுள்ளார்.