அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சார்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் நேற்று இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முகுந்த் வரதராஜனின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி அமரன் பட குழுவினர் சல்யூட்டிங் மேஜர் முகுந்த் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அதோடு சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்துள்ள ராணுவ உடை அணிந்த கெட்டப்புடன் மேஜர் முகுந்தனின் நினைவு இடத்துக்கு சென்று சல்யூட் அடித்தபடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
அது குறித்த ஒரு புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, நமது தேசியக்கொடி காற்று அசைவதால் பறப்பதில்லை. அதனை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் இறுதி மூச்சில்தான் பறக்கிறது என்று பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.