லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் தயாராகி கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்தப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் பத்து நண்பர்களில் ஒருவராக நடித்திருந்த சவ்பின் சாஹிர் என்பவர் தான், தனது பறவ பிலிம்ஸ் மூலமாக பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார். 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மலையாள சினிமாவில் முதன்முறையாக 200 கோடி வசூலைத் தொட்ட படம் என்கிற பெருமையையும் பெற்றது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சிராஜ் வலையதாரா என்பவர் இந்த படத்தின் தயாரிப்புக்காக தான் ஏழு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், படம் வெளியான பின் லாபத்தில் தனக்கு நாற்பது சதவீதம் பங்கு தருவதாக கூறப்பட்டதாகவும் ஆனால் இப்போது தயாரிப்பாளர்கள் தனது முதலீட்டையும் லாப சதவீதத்தையும் தர மறுப்பதாகவும் எர்ணாகுளம் கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், அதுவரை அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்த போலீசார் தற்போது மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் மீது எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.