வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் வருகிற 22ம் தேதி டைட்டில் உடன் கூடிய டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினி 171வது படத்திற்கான நடிகர் நடிகைகள் டெக்னீசியன்களை தற்போது ஒப்பந்தம் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் விக்ரம் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஆகியோர் ஏற்கனவே இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனும் ரஜினி 171 வது படத்தில் இணைந்திருக்கிறார்.




