ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ் சினிமாவில் உள்ள சில இயக்குனர்களுக்குக் கூட இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததா என்று வியக்கும் அளவிற்கு 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் சிதம்பரம் மற்றும் குழுவினர் இங்கு பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்கள்.
அப்படம் 'குணா' படத்தில் இடம் பெற்ற குகையை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். அப்படத்தின் தாக்கத்தால்தான் இந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தையே உருவாக்கினர். அதனால், தமிழகத்திலும் படம் பிரமாதமாக ஓடி 50 கோடி வசூலைக் கடந்தது.
படம் வெளியான சில தினங்களிலேயே 'குணா' நாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். அடுத்து தனுஷ், விக்ரம், சிம்பு உள்ளிட்டவர்களும் அவர்களைப் பாராட்டினார்கள். இப்போது ரஜினிகாந்தும் அவர்களை அழைத்து பாராட்டியுள்ளார்.
தமிழில் வந்த சில நல்ல படங்களுக்குக் கூட இப்படிப்பட்ட பாராட்டுக்களை இந்த டாப் நடிகர்கள் அளித்திருக்க மாட்டார்கள். ஆனால், மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழுவினரை மனப்பூர்வமாகப் பாராட்டியுள்ளார்கள். எந்த ஒரு மலையாளப் படக் குழுவினருக்கும் கிடைக்காத பெருமை இது.