ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தீவிரமாகி வருகின்றன. நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (09.03.24) அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். இதனை நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதற்கு திரையுலகினர் பலரும் நிதி அளித்துள்ளனர். இடையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பாக நடந்த பிரச்னையால் இந்த பணிகள் நின்று போகின. கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க இன்னும் பல கோடி நிதி தேவைப்படுகிறது. சமீபத்தில் அமைச்சரும், நடிகருமான உதயநிதியும் ரூ.1 கோடி நிதி உதவி அளித்து இருந்தார்.