எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படம் 100 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. அடுத்து ஹரி இயக்கத்தில் 'ரத்னம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிளான 'டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி மச்சி' பாடல் நேற்று வெளியானது.
அது குறித்து விஷால், “எனது சினிமா வாழ்க்கையில் 19 வருடங்களுக்குப் பிறகு கடைசியாக அந்த நேரம் வந்துள்ளது. டார்லிங் தேவிஸ்ரீபிரசாத்துடன் எனது முதல் கூட்டணி. மற்ற நடிகர்களுக்கு ஒரு மேஜிக்கல் பாடலைக் கொடுத்தது போல எனக்கும் தர வேண்டும் என, உன்னை நான் அடிக்கடி எரிச்சலூட்டிக் கொண்டே இருப்பேன். அதற்கு 'டோன்ட் வொர்ரி மச்சி', என உனது பதில் இருக்கும். இப்போது கடைசியாக, வாழ்க்கையின் முரணாக நீ உண்மையில் அதைச் சொன்னாய் என்பது தெரியவில்லை.
'ரத்னம்' படத்தில் நமது முதல் சிங்கிள் 'டோன்ட் வொர்ரி டோன்ட் வொர்ரி மச்சி' ஆச்சரியமானது. எனது வாழ்க்கையை மனதில் வைத்து இயக்குனர் ஹரியும், பாடலாசிரியர் விவேகாவும் இதை எழுதியிருப்பார்கள் என நினைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், “வாவ் வாவ்… என்ன ஒரு அற்புதமான மெசேஜ் டார்லிங் பிரதர் விஷால். நமது முதல் கூட்டணி, மற்றும் இன்னும் அதிகமாக கலக்குவோம். ஆனால், இப்போது நான் 'உனக்கு நன்றி மச்சி' என்று மட்டும் சொல்வேன். இயக்குனர் ஹரி சார், விவேகா ஆகியோருடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் பிடித்து நடனமாடுவீர்கள் என நம்புகிறேன்,” என பதிலளித்துள்ளார்.