மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கார்த்தியின் 26வது படம் துவக்கம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்குகிறார்
'சூது கவ்வும்' படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நலன் குமாரசாமி, அதன் பிறகு அவர் இயக்கிய காதலும் கடந்து போகும் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் அவருக்கு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. அதன் பிறகு 'மாயவன்' படத்திற்கு கதை வசனம் எழுதினார், 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு வசனம் எழுதினார். 'குட்டி ஸ்டோரி' என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையை இயக்கினார். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் கார்த்தியின் 26வது படத்தை இயக்குகிறார்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிப்பதாகவும், சந்தோஷ் நாரயணன் இசை அமைப்பதாகவும், ஜார்ஜ் வில்லியம் ஒளிப்பதிவு செய்வதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. இதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.