இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி ரிலீஸிற்கு தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன் 2 . இதையடுத்து கார்த்தி தனது 25-வது படமான ஜப்பான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதை ஜோக்கர் பட புகழ் ராஜூ முருகன் இயக்குகிறார். இந்நிலையில் முதல் முறையாக கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் கதாநாயகியாக காயத்திரி பரத்வாஜ் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படப்பிடிப்பை மே முதல்வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.