இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களும் கதாநாயகர்களாக மாறி நடித்தது இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு வரிசையில் அடுத்ததாக நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள 'விடுதலை' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் மார்ச் 31ம் தேதி வெளியாக உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகர்களாக மாறியவர்களுக்கு சில படங்கள்தான் தொடர்ந்து கை கொடுத்துள்ளன. அதன்பின் அவர்கள் சந்தித்த ஏமாற்றங்கள்தான் அதிகமாக உள்ளன.
ஒரு சில காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோம் என இருப்பதையும் விட்டுவிட்டு தவித்துள்ளார்கள். ஆனால், சூரி தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். 'விடுதலை' படத்தின் டிரைலர்கள், பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பின் மூலம் படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.