இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

யசோதா படத்தை அடுத்து தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து அவர் கூறுகையில், இந்த சாகுந்தலம் படத்தின் கதையை இயக்குனர் என்னிடத்தில் சொன்னபோது அதில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு பயமாக இருந்தது. எனக்குள் அந்த கம்பீரம், தேஜஸ் இருக்காது என்று நினைத்தேன். என்றாலும் இயக்குனர் என்னை வற்புறுத்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு எனது கதாபாத்திரம் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியாது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்றும் நான் எனக்குள் ஒரு முடிவு செய்து கொள்வேன். என்னுடைய பயத்தை தாண்டி வெற்றி பெற முயற்சி செய்வேன். என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் இப்படித்தான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். ஒரு நடிகையாக எனது முன்னேற்றத்திற்கு காரணமே இந்த பயம்தான் என்றும் தெரிவித்திருக்கிறார் சமந்தா.