50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் |

கடந்த 2017ல் வெளிவந்த 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுரேஷ் செங்கையா. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இவருக்கு அடுத்த பட வாய்ப்பு சற்று தாமதமாக கிடைத்தது. சமீபத்தில் நடிகர் பிரேம்ஜியை வைத்து 'சத்திய சோதனை' என்கிற படத்தை இயக்கி இதுவும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்கும் வாய்ப்பை உடனே பெற்றுள்ளார் சுரேஷ் செங்கையா. யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து 'கிணத்த காணோம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.




