வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

நடிகை ஸ்ரீ திவ்யா தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ஈட்டி, மருது உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஸ்ரீ திவ்யா பெரிதளவில் படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் 27வது படத்தை '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார். ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இதில் கார்த்திக்கு தங்கை கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்கு கதாநாயகியை விட அதிக முக்கியத்துவம் உள்ளதாக கூறுகின்றனர்.
இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரை சுற்றி நடைபெறும் குடும்ப கதை என்கிறார்கள்.




