பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் |
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் குட் புக்கில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதைத்தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, மருது, ஈட்டி என இளம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வந்தார். திடீரென ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திரையரங்கை விட்டு சில வருடங்களாக ஒதுங்கியே இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. கடைசியாக 2017-ல் ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த சங்கிலி புங்கிலி கதவ திற என்கிற படம் வெளியானது.
இந்த நிலையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதிவ்யா நடித்த படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. ஆம். இன்று மலையாளத்தில் வெளியாகியுள்ள ஜனகனமன என்கிற படத்தில் நடித்திருப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் ஸ்ரீதிவ்யா.. நாளை இந்தப்படம் தமிழிலும் வெளியாகிறது.
பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ளார். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு, மம்தா மோகன்தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஸ்ரீதிவ்யாவுக்கு மலையாளத்தில் ஒரு புதிய பாதையை போட்டுக் தருவதுடன் திரையுலகிற்கு ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரியாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.