அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
2024ம் ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்', விஜய் சேதுபதி நடித்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்', அருண் விஜய் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்கள் வெளிவந்தன.
இவற்றில் 'அயலான், கேப்டன் மில்லர்' ஆகிய படங்கள் நேற்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ளன. இரண்டு படங்களும் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. சென்னை மாநகரத்தை எடுத்துக் கொண்டால் 'அயலான்' படம் 23 தியேட்டர்களிலும், 'கேப்டன் மில்லர்' படம் 3 தியேட்டர்களில் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற மாநகரங்களிலும் 'அயலான்' படத்திற்குத்தான் கூடுதல் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இரண்டு படங்களுமே 75 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்திருந்தாலும் லாபத்தைத் தரவில்லை என்ற வருத்தத்தில் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் அடுத்த வெளியீடாக அவரது 21வது படமும், தனுஷின் அடுத்த வெளியீடாக அவரே இயக்கி நடிக்கும் அவரது 50வது படமும் அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம்.