இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
மலையாளத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பிரபல இயக்குனராக இயங்கி வருபவர் ஷாஜி கைலாஷ். தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார். இடையில் இவரது பயணத்தில் சிறிய தேக்கம் ஏற்பட்டாலும் மீண்டும் பிரித்விராஜ், மோகன்லால் ஆகியோரின் படங்களை இயக்கியதன் மூலம் விட்ட இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில் இவரது மகன் ருஷின் மலையாள சினிமாவில் நடிகராக தன் பயணத்தை துவங்கி, 'கேங்க்ஸ் ஆப் சுகுமார குரூப்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை செபி சவுக்கத் என்பவர் இயக்குகிறார். இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக வேறு ஒரு நபரை கொன்று நாடகமாடி தலைமறைவான முன்னாள் கிரிமினல் சுகுமார குரூப் என்பவனின் வாழ்க்கை சம்பவங்களை பற்றிய படமாக இது உருவாகிறது. ஏற்கனவே துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான குரூப் படத்தின் கதையும் இதுதான் என்பதை குறிப்பிடத்தக்கது.
தந்தையின் வழியை பின்பற்றி இயக்குனர் பாதையில் செல்லாமல் நடிப்பு பாதையை இவர் தேர்ந்தெடுத்ததற்கு, இவரது அம்மா ஆனி ஒரு முன்னாள் நடிகை என்பதும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.