தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
2011ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த படம் அவர்களும் இவர்களும். இந்த படத்தை வீரபாண்டியன் என்பவர் இயக்கியிருந்தார். வீரபாண்டியன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஐஸ்வர்யா ராஜேஷை திரை உலகிற்கு கொண்டு வந்ததே நான் தான். ஆனால் இந்த விஷயத்தை அவர் எந்த பேட்டியிலும் கூறுவதில்லை. அதோடு தற்போது அவர் பெரிய நடிகையாக வளர்ந்து விட்டதால் என்னுடைய இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் பணத்திற்கு கஷ்டப்பட்டபோது ஆட்டோவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்றும், சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் வீரபாண்டியன். அவர் சொன்ன இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நேரடியாக வீரபாண்டியனை கூறாமல், மறைமுகமாக, ‛‛நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டுவிட்டு பேசுகிறார்கள். விஷயம் நடந்த இடத்தில் இல்லாத விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வது வாழ்க்கையும் உறவினையும் கெடுத்துவிடும். யாராக இருந்தாலும் மொத்த கதை என்னவென்று தெரிந்து கொண்ட பிறகு ஒருவரை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே சரியானதாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.