மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் | கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! |
பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஒடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற ஒரு படம்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியிட்டார்கள். ஆனால், அதன்பின் படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது. 'தங்கலான்' படத்தை முடித்த பிறகுதான் பா ரஞ்சித் இந்தப் படத்தின் வேலைகளை ஆரம்பிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் 'தங்கலான்' படம் உள்ளது. ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்கான குத்துச்சண்டைப் பயிற்சியை ஆர்யா ஆரம்பித்துள்ளார். அவருடைய சமூக வலைத்தளத்தில் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றை ஆர்யா பதிவிட்டுள்ளார். அதனால், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.