லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் ‛தி கோட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். சம்மரில் வெளியாகும் விதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பலரும் மறந்து விட்ட விஷயம் என்னவென்றால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு கன்னட முன்னணி நடிகரான சுதீப்பை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. அந்த சமயத்தில் பெங்களூரு வந்த வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார் சுதீப். அதை தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் என்று வெங்கட் பிரபுவும் கூறி இருந்தார்.
அப்போது மாநாடு படம் கிட்டத்தட்ட முடிவடைந்து இருந்த நிலையில் அதன் பிறகு அவர் சுதீப் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி படத்தை இயக்குவதாக அறிவித்தார் வெங்கட் பிரபு. அதை முடித்துவிட்டு இதோ இப்போது விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுதீப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கிட்டத்தட்ட அந்த படம் வெறும் செய்தி அளவிலேயே கைவிடப்பட்டதாகவும் கன்னட திரையுலகில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது உண்மை என்பது போன்று சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கிச்சா சுதீப் கலந்துரையாடினார். அப்போது, ஒரு ரசிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நீங்கள் நடிக்க இருந்த படம் என்ன ஆனது? என்று ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், வெங்கட் பிரபுவை காணவில்லை என்று பதில் கொடுத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் சுதீப் கொடுத்த இந்த பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.