மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47) புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் காலமானார். பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணியின் திடீர் மறைவு இளையராஜா குடும்பத்தார் மற்றும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்வர், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
"பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இளையராஜா அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்
இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நடிகர் சிம்பு
மக்கள் இதயத்தில் உங்கள் குரல் என்றும் வாழும். நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள். சீக்கிரமே சென்றுவிட்டார். இந்த நேரத்தில் இளையராஜா சார் மற்றும் எனது சகோதரர் யுவன் மற்றும் குடும்பத்தாருக்கு வலிமை தர இறைவனை வேண்டுகிறேன். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் பவதாரிணி.
இயக்குனர் பாரதிராஜா
என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்.. மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
நடிகர் பிரசன்னா
பவதாரிணியின் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இசைஞானி இளையராஜா சார் மற்றும் அவரது குடும்பத்தாருக்காக என் இதயம் செல்கிறது. அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
பாடகி சின்மயி
எனக்கு தெரிந்த நல்ல மனிதர்களில் பவதாரிணி இளையராஜாவும் ஒருவர். அவருடன் செல்வது பாதுகாப்பான பயணம், அழகான பெண். ராஜா சார், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது.
நடிகை சிம்ரன்
பவதாரிணியின் மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. இக்கட்டான நேரத்தில் ராஜா சார் மற்றும் யுவனின் குடும்பத்தாருக்கு இதயப்பூர்வமான இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
பவதாரிணியின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. இளையராஜா சார், யுவன் சார், கார்த்திக் ராஜா சார் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நடிகை சோனியா அகர்வால்
பவதாரிணியின் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
இசையமைப்பாளர் தமன்
இந்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது. இளையராஜா சார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டுகிறேன். பவதாரிணி சீக்கிரமே சென்றுவிட்டார். இதயம் கனக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
இயக்குனர் சீனுராமசாமி
உங்களுக்கு என் பிரார்த்தனை சகோதரி. உங்கள் குரலுக்கு நன்றி. பாடும் பறவையாக மீண்டும் வாருங்கள். பவதாரிணியின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
நடிகர் கமல்ஹாசன்
மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்.