ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த வடிவேலுவும், பகத் பாசிலும் அடுத்தபடியாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம், ஒரு நடுத்தர வயதை சார்ந்தவரும் , ஒரு இளைஞரும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவத்தை மையமாக கொண்ட காமெடி கலந்த கதையில் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு மாரீசன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.