ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று ஜனவரி 19ம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் இரங்கல் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த விழாவில் இன்றைய நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மற்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நாசர் தலைமையிலான அணியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்த முந்தைய நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் கலந்து கொண்டு அவர்களது பெருந்தன்மையை வெளிப்படுத்தினர். விஜயகாந்த்துடன் அவர்களுக்கு இருந்த நட்பை, பாசத்தை அது வெளிப்படுத்தியது.
நேற்றைய இரங்கல் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்களான பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் நடத்தினர். கூட்டத்தில் நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், விக்ரம், ஜெயம் ரவி, சத்யராஜ், பார்த்திபன், விஜய் ஆண்டனி, ரகுமான், பொன்வண்ணன், ஆனந்தராஜ், பசுபதி, ராஜேஷ், சின்னி ஜெயந்த், மன்சூரலிகான், எம்எஸ் பாஸ்கர், விக்னேஷ், ரவி மரியா, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், ரெடின் கிங்ஸ்லி, நடிகைகள் லதா, அம்பிகா, ராதா, சரண்யா, சிம்ரன், ரேகா, தேவயானி, காயத்ரி ரகுராம், ரித்விகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் சுதீஷ் மற்றும் திரையுலகத்தைச் சார்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்களும், இன்றைய இளம் கதாநாயகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மற்ற மொழிகளிலிருந்தும் எந்த ஒரு நடிகரும் வரவில்லை. விஜயகாந்த் மறைவில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்விலும் அஜித் கலந்து கொள்ளவில்லை. விஜயகாந்த் மறைவின் போது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட வடிவேலு நேற்றைய இரங்கல் கூட்டத்திற்கு வரவில்லை.
நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர்
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.கே.செல்வமணி, மன்சூரலிகான், டி.சிவா உள்ளிட்ட பலரும் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் பதிலளிக்கவில்லை.
துணை தலைவர் பூச்சி முருகன் பேசும்போது, “அனைவருடையே கோரிக்கையும் நியாயமானது. என்றாலும் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும்” என்றார்.