ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்து படங்கள் இயக்கி கொண்டிருந்த காலத்தில் இவர்கள் இணையும் படத்தில் கண்டிப்பாக சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனம் இடம்பெறும். அந்த வகையில் தயாரான படம் 'வீட்டுக்கு ஒரு கண்ணகி'. இந்த படத்தில் சுஜாதா, ஜெய்சங்கர், நளினி, சங்கிலி முருகன், சத்யகலா, ரவீந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
வழக்கம்போல இந்தப் படத்திலும் கவர்ச்சி ஆடலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் சில்க் ஸ்மிதா. இரண்டு நாட்கள் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆட சில்ஸ் ஸ்மிதா மறுத்து விட்டார். பின்னர் அந்த பாடல் காட்சி அனுராதா ஆட்டத்தில் படமானது. இந்த படத்தில் ஆட சில்க் ஸ்மிதா சம்பளத்தை உயர்த்தியதாகவும், தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முந்தைய படங்களில் ஆடிய சம்பளத்தைதான் தருவதாகவும் கூறியதால் சில்க் ஸ்மிதா ஆடவில்லை, சில்க் ஸ்மிதாவிற்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதியில்தான் அனுராதா ஆடியதாகவும் கூறுவார்கள்.
ஆனால் சில்க் ஸ்மிதா சம்பளத்தை பெரிதாக பார்க்க மாட்டார். பல படங்களில் சம்பளம் வாங்கமலேயே ஆடியிருக்கிறார். சிறு படங்களில் குறைந்த சம்பளத்தில் ஆடியிருக்கிறார் என்று ஒரு சாரார் அப்போது கூறினார். படத்தில் ஜெயமாலினியின் கவர்ச்சி நடனம் ஒன்று இடம்பெற்றது சில்க் ஸ்மிதாவிற்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனாலும் சில்க் ஸ்மிதா ஆட மறுத்ததற்கான உண்மையான காரணம் கடைசி வரை தெரியவில்லை.




