லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாண்டியராஜ் இயக்கத்தில் ‛தலைவன் தலைவி' படத்தில் நடித்த முடித்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்தபடியாக பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, ஹிந்தி நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு எதிர்மறையான வில்லி வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், சமீப காலமாக அம்மா, அத்தை போன்ற வேடங்களில் நடிக்கும் தபு, அவ்வப்போது கவர்ச்சிகரமான வேடங்கள் மற்றும் வில்லி வேடங்களிலும் நடித்து வருகிறார். அதில், வில்லி வேடங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் அதை கருத்தில் கொண்டு இந்த படத்தில் தபுவை ஒரு அதிரடியான வில்லி வேடத்தில் நடிக்க வைக்கிறாராம் பூரி ஜெகன்னாத்.