பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
திமிரு படம் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது செலெக்ட்டிவ்வான சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு வட்டமேஜை உரையாடலின்போது பேசிய ஸ்ரேயா ரெட்டி பொன்னியின் செல்வன் படத்தின் கதை தனக்கு புரியவே இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இவர் இப்படி கூறுவதற்கு முன்பாக பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் பேசும்போது பொதுவாக வரலாற்று படங்களை கொடுப்பவர்கள் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டால் அவர்கள் படத்தை புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். அதற்காக முழு கதையையும் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.
அவர் கூறிய அந்த விஷயத்தை மேற்கோள் காட்டி பேசிய ஸ்ரேயா ரெட்டி, பொன்னியின் செல்வன் கதை எதை நோக்கி நகர்கின்றது என்றே தனக்கு புரியவில்லை என்றும் கதாபாத்திரங்கள் மீதான குழப்பமும் தனக்கு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுக்களை வெற்ற நிலையில் நடிகை ஸ்ரேயா ரெட்டி இவ்வாறு கூறியுள்ளது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.