நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விஜய் நடித்து வரும் அவரது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு 'தளபதி 68' என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் வருகிற புத்தாண்டையொட்டி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் 68 வது படத்திற்கு 'பாஸ்' என டைட்டில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. இதனை தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில், “எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. வெங்கட் பிரபு ஸ்பெஷலான ஒன்றை தயார் செய்திருக்கிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். கூடிய விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும். ஆனால் தளபதி 68 படத்தின் டைட்டில் பாஸ் இல்லை" என்று பதிவிட்டிருக்கிறார்.