நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கும்பாரி'. இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி , ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெவின் ஜோசப் இயக்கி உள்ளார். பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிருத்வி இசை அமைக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கெவின் ஜோசப் கூறியதாவது: பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் பிராங் ஷோக்களுக்கு எதிராக கொதிக்கிற நாயகன், அதை நடத்தும் பெண்ணை காதலிக்கிறான். காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட... அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இது ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை. சிவகார்த்திகேயன் நடித்த 'மனம் கொத்திப் பறவை 'போல் காதலர்கள் செய்யும் பயணம் தான் இப்படம். காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படம்.
கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருள். இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது. குமரி மண்ணின் அழகும், மண் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன. இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும் பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.