'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

தெலுங்கு நடிகர் ரவிதேஜாவை வைத்து ஏற்கனவே ஷாக் மற்றும் மிரப்பகாய் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரிஷ் சங்கர் அடுத்ததாக மூன்றாவது முறையாக ரவிதேஜா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகியாக இலியானா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாலிவுட் இளம் நடிகை பாக்யஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது கதாபாத்திர போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
பாக்யஸ்ரீயின் வருகை குறித்து இயக்குனர் ஹரிஷ் சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “பாக்யஸ்ரீக்கு இதயம் கனிந்த வரவேற்பு.. நீங்கள் இங்கே வந்து தங்கி வெல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் வெல்வதற்காக பிறந்தவர். உங்களுடைய ப்ளாக் பஸ்டர் கேரியர் எங்களது படத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'யாரியான் 2' படத்தில் பாக்யஸ்ரீ நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




