ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடித்து வரும் அமீர் கான் | தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன? | மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் |
சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பின்பு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை தற்போதைய டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி வரும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 1995ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
முத்து பட ரிலீஸ் சமயத்தின் போது இருந்த அதே வரவேற்பு இப்போது இந்த படத்தின் ரீ ரிலீஸுக்கும் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் படத்தின் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், கதாநாயகி மீனா உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வின் போது ரசிகர்களுடன் பேசிய கே.எஸ் ரவிக்குமார் அடுத்ததாக படையப்பா திரைப்படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.