ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோக்கள் வந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் சில சுவையான நல்ல விஷயங்களும் நடந்து வருகிறது. குறிப்பாக 'ஜெயிலர்' பட காவாலாவுக்கு சிம்ரனை ஆட வைத்தது, 'ஜெயிலர்' படத்தின் பாடல் ஒன்றில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. குரலைப் பயன்படுத்தியது, சிவராஜ்குமார் நடித்த கோஸ்ட் படத்தில் புனித் ராஜ்குமாரை கொண்டு வந்தது என நிறைய இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் உருவத்தை உருவாக்கி “கண்போன போக்கிலே கால் போகலாமா” என்ற பாடலை அவர் பாடுவது போன்று செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
பெரிய பட்ஜெட் இருந்தால் எம்.ஜி.ஆரின் படத்தை மறு உருவாக்கம் செய்யலாம். அல்லது இன்றைய ஹீரோக்கள் போன்று அவரை புதிய படத்தில் நடிக்க வைக்கலாம் என்கிறார்கள். ஏற்கெனவே அப்படியான ஒரு முயற்சி தொடங்கப்பட்டு அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.