நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக நாளை(நவ., 24) வெளிவருவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படம் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக கூறி ஒப்பந்தம் போட்டு முன் பணமாக ரூ.2.40 கோடி பெற்றுள்ளார் கவுதம் மேனன். ஆனால் படத்தை எடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் இந்நிறுவனம் கவுதம் மேனன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் பணத்தை திருப்பி தராமல் படத்தை வெளியிட மாட்டோம் என உறுதி அளித்தார். இதையடுத்து, நாளை காலை 10:30 மணிக்குள் 2 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பித்தர வேண்டும், இல்லையெனில் படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.