கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? | 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர் | பிளாஷ்பேக் : தணிக்கையில் சிக்கிய பிரபு படம் | பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம் | இந்தாண்டு ‛நம்ம தீபாவளி' : தீபாவளிக்கு வெளியாகும் ‛லெஜெண்ட்' சரவணனின் புதிய படம் | சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணனின் கண்ணப்பா படத்துக்கு தம்பி பாராட்டு | ராஷ்மிகா கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரசிகர்கள் | கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி | சுரேஷ் கோபி பட டைட்டில் பிரச்னையில் சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் கேள்வி |
யோகி பாபு நாயகனாக நடித்துள்ள புதிய படம் குய்கோ. இந்த படத்தில் விதார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வருகிற 24ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கிராமத்தில் மாடு மேய்ப்பவனாக இருக்கும் யோகி பாபு, ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் மாடு மேய்க்கிறவனுக்கு பெண் தர மாட்டோம் என்று கூறி விட, கடுமையான கோபத்தில் சவுதிக்கு சென்று பணக்காரராகி விடுகிறார்.
அந்த நேரத்தில் அவரது தாயாரின் மரணச் செய்தியை கேட்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது அவரது அம்மாவின் பிணம் காணாமல் போய்விடுகிறது. இதை அடுத்து என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதையாக உள்ளது. காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அருள் செழியன் என்பவர் இயக்கி உள்ளார்.