ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தீபாவளி வந்து பத்து நாட்கள்தான் ஆகிறது. ஆனால், தீபாவளிக்கு வெளிவந்த படங்கள் பத்து நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருப்பது தியேட்டர் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரக் காட்சிகளில் மிகவும் குறைவான ரசிகர்களுடன் தியேட்டர்கள் நடைபெற்று வருகின்றன. இரவுக் காட்சிகளை பெரும்பாலான தியேட்டர்களில் ரத்து செய்யும் நிலைதான் இருக்கிறதாம்.
தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம்தான் வரவேற்பைப் பெற்றது என்றார்கள். ஆனால், அந்தப் படத்திற்கும் கூட இந்த வாரத்தில் வரவேற்பு இல்லையாம். நாளை மறுதினம் ஏழெட்டு படங்கள் வெளியாக உள்ளன. அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் அந்தப் படங்களை ரசிகர்கள் வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.
தீபாவளி வந்தால் குறைந்தது இரண்டு, மூன்று வாரங்களாவது தியேட்டர்காரர்கள் திருப்தியாக இருப்பார்கள். ஆனால், இந்த வருட தீபாவளி தங்களுக்கு ஏமாற்றமே என அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.