ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தெலுங்கில் இயக்கி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. தமிழில் அவர் இயக்கி வந்த 'இந்தியன் 2' படத்தில் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கப் போனார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிளான 'ஜரகண்டி ஜரகண்டி' பாடலை வெளியிடுவதாக இருந்தார்கள். கடைசி நேரத்தில் அதையும் ரத்து செய்துவிட்டார்கள். படமும் இழுத்துக் கொண்டே போவதால் ராம் சரணும் கடுப்பில் இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், இயக்குனர் ஷங்கருக்கு அவர் நெருக்கடியைக் கொடுத்து படத்தை சீக்கிரம் முடிக்கச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
ராம் சரண் அவருடைய அடுத்த படத்தை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம். புச்சிபாபு சனா இயக்க உள்ள அப்படம் ராம் சரணின் 16வது படம். அதற்காகத்தான் 'கேம் சேஞ்சர்' படத்தை சீக்கிரம் முடித்தாக வேண்டும் என தயாரிப்பாளரிடமும் சொல்லியிருக்கிறார் எனத் தகவல்.
'கேம் சேஞ்சர்' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நாளை முதல் மைசூரில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.