என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

த.செ.ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், பஹத் பாசில், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'வேட்டையன்'. பெரிய வரவேற்பையும், வசூலையும் பெறாமல் போன ஒரு ரஜினிகாந்த் படம்.
'புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்' என்ற பெயரில் ஜப்பான் நாட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினிக்கு ஜப்பான் சினிமா ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. 'முத்து' பட காலத்திலிருந்து இன்று வரை அது தொடர்ந்து வருகிறது.
ஜப்பான் சினிமா ரசிகர்கள் படத்தைப் பார்த்துப் பாராட்டி சமூக வலைதளங்களில் அவர்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். பலருக்கும் படம் பிடித்திருக்கிறது. அவற்றைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் 'வேட்டையன்' படத்தை கடந்த வருடம் வெளியிட்ட போது அதன் தயாரிப்பு நிறுவனம் சரியான விதத்தில் புரமோஷன் செய்யவில்லை என்று குறை சொல்லி வருகிறார்கள்.