நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார். ரஜினியை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்களும் ‛தலைவா, தலைவா' என ஆர்பரித்து தீபாவளி வாழ்த்து கூறினர்.
கமல் வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
விடிவானில் ஒளிர்மீன்கள்
விண்ணெல்லாம் ஒளிரட்டும்
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும்.