டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது |
இந்திய கிரிக்கெட் உலகின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து ஓய்வு பெற்றவர் யுவராஜ் சிங். முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பை 2007ம் ஆண்டு நடந்த போது இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சருக்குப் பறக்கவிட்டு சாதனை புரிந்தவர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட ஆரம்பித்து 2017ல் ஓய்வு பெற்றார். பல ஒரு நாள் போட்டிகள், டி 20 போட்டிகளில் அவருடைய பேட்டிங், பந்து வீச்சு, சிறந்த பீல்டிங் ஆகியவற்றில் இந்திய அணி வெற்றி பெற்றதற்குப் பெரும் பங்களித்தவர்.
இந்திய அணியில் பரபரப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது 'கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்டவர். சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்து விளையாடி அசத்தியவர்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க ஹிந்தி நடிகர் ஆமீர்கான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பெரும் தொகை கொடுத்து அந்த உரிமையை யுவராஜிடமிருந்து பெற்றுள்ளாராம். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரரான எம்எஸ் தோனியின் பயோகிராபி படம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆமீர்கான் நடித்து 2001ல் வெளிந்த 'லகான்' படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனால், யுவராஜின் வாழ்க்கை வரலாற்றைப் பொறுப்பாகவும், சிறப்பாகவும் ஆமீர்கான் தயாரித்து நடிப்பார் என்ற நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நம்பிக்கை அளித்துள்ளது.