தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ஒரு பதவிக்கு அல்லாமல் சில பதவிகளுக்கு சேர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர்கள் | ஜன., 16ல் துவங்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி: விளம்பர துாதர் நடிகை மீனா | சென்னையை மறக்காத சிவராஜ்குமார் : தம்பி குறித்து உருக்கம் | 2025 : மிகவும் குறைந்து போன ஓடிடி நேரடி வெளியீடுகள் | படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி | பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி” | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | 2025ம் ஆண்டின் கடைசி வார வெளியீடுகள் | பராசக்தி உருவாக காரணமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் | மத்திய அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்த நடிகை ஆம்னி! |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மே 1ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் தாண்டி மற்றும் மாநிலங்களிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தில் இந்த படத்தில் தெலுங்கு பதிப்பிற்கான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்போதெல்லாம் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நட்பு பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த ரெட்ரோ பட விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது தான் நடிகனாக வளர்வதற்கு சூர்யா எந்த அளவிற்கு ஒரு தூண்டுதலாக இருந்தார் என நினைவு கூர்ந்தார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் இந்த படம் பல வருடத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வாக எடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அப்படி பழைய காலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் யாரை சந்திப்பீர்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.
பொதுவாக இதுபோன்ற கேள்விக்கு எல்லோரும் மகாத்மா காந்தியை சந்திப்பேன்,. சுபாஷ் சந்திர போஸை சந்திப்பேன் என்று தானே கூறுவார்கள் ? ஆனால் விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக, “நான் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'சாவா' திரைப்படத்தை பார்த்தேன். அதில் அவுரங்கசீப்பின் செயல்பாடுகளை பார்த்தபோது, எனக்கு மட்டும் கால எந்திரத்தில் பின்னோக்கி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலேயர் காலத்திற்கு சென்று பிரிட்டிஷ்காரர்களுக்கு இரண்டு அறை கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல அவுரங்கசீப்புக்கும் அதேபோல இரண்டு அறை கொடுக்க வேண்டும். அந்த அளவிற்கு எனக்கு கோபம் இருக்கிறது. எனக்கு வரலாற்று காலத்திற்கு பின்னோக்கிப் போக வாய்ப்பு கிடைத்தால் என்னிடம் இது போன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியலே நிறைய இருக்கிறது” என்று கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் பேசி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார் விஜய் தேவரகொண்டா.