நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! | பொங்கல் வெளியீட்டில் அனல் பறக்குமா : ஜனநாயகன், பராசக்தி விழாவில் பேசுவார்களா? | தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்! | நிதி அகர்வாலை தொடர்ந்து கூட்டணி நெரிசலில் சிக்கிக்கொண்ட சமந்தா! | வெளிநாட்டு முன்பதிவில் 4 கோடி வசூலித்த விஜய்யின் 'ஜனநாயகன்' | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சதீஷ் : இன்னொரு ஹீரோ ஆதி சாய்குமார் |

இயக்குனராக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக அசத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ‛லவ் டுடே, டிராகன், டியூட்' என தொடர் வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே)' படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இதற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்க உள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க தற்போது மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மீனாட்சி சவுத்ரி தமிழில் ‛கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.