50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் |
பாலிவுட்டில் கடந்த சில வருடங்களில் வெளியான வெப் சீரிஸ்களில் 'பேமிலி மேன்' வெப்சீரிஸின் அடுத்தடுத்த பாகங்கள் ரொம்பவே பிரபலம். ராஜ் மற்றும் டி.கே இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ் தொடர்களில் நடிகை சமந்தா தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்ட பாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் இந்த தொடரில் நடித்துள்ளனர்.
அந்த வகையில் 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸில் நடித்து கவனம் பெற்றவர் வளர்ந்து வரும் நடிகரான ரோஹித் பேஸ்போர் என்பவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் குழுவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கவுஹாத்தி அருகில் உள்ள கர்ப்பங்கா நீர்வீழ்ச்சியில் மதியம் 2 மணி அளவில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் இது குறித்து விரிவான தகவல் அறிக்கை வெளியாகும் என தெரிகிறது.